sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கல்வி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் புறக்கணிப்பு: மோடி அரசுக்கு தி.மு.க., கண்டனம்

/

கல்வி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் புறக்கணிப்பு: மோடி அரசுக்கு தி.மு.க., கண்டனம்

கல்வி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் புறக்கணிப்பு: மோடி அரசுக்கு தி.மு.க., கண்டனம்

கல்வி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் புறக்கணிப்பு: மோடி அரசுக்கு தி.மு.க., கண்டனம்

2


ADDED : டிச 23, 2024 05:28 AM

Google News

ADDED : டிச 23, 2024 05:28 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'வரும், 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., 200 அல்லது 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும்' என, தி.மு.க., செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., செயற்குழு கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

 ↓அம்பேத்கரை அவதுாறாக பேசி-, அவரது தியாகத்தை இழிவுபடுத்திய, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கண்டனம்

 ↓↓தமிழகத்திற்கு நிலுவையில் இருந்த, மாநில பேரிடர் நிதியில் இருந்து, 944.80 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

இது, வழக்கமான நிதி. 'பெஞ்சல்' புயலுக்கு முதல்வர் கோரிய அவசர தொகையான 2,000 கோடி ரூபாய்; நிரந்தர மறு சீரமைப்புக்கான 6,675 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்காததற்கு கண்டனம். மாநில அரசு கேட்கும் பேரிடர் நிதியை மத்திய அரசு விரைவில் ஒதுக்க வேண்டும்

 ↓'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டத்தை திணிக்க, அறிமுகம் செய்யப்பட்டுள்ள மசோதாவை முழுமையாக கைவிட வேண்டும்

 ↓↓டங்ஸ்டன் கனிமத்தை ஏலம் விடும் உரிமையை எடுத்துக் கொண்ட பா.ஜ., அரசுக்கும், அதற்கு ஓட்டு போட்ட அ.தி.மு.க., வுக்கும் கண்டனம்

 ↓↓தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல், மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டும். மாநில உரிமைகளை கல்வித்துறையிலும் பறிக்கும் மத்திய அரசின் எதேச்சாதிகார போக்கு கண்டிக்கத்தக்கது

 ↓திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவை, டிசம்பர் 30, 31ம் தேதிகளில் தமிழகம் முழுதும் முன்னெடுத்து, சமத்துவத்தை நிலைநாட்டுவோம்

 ↓பொங்கல் திருநாளை, தமிழர் பண்பாட்டு திருவிழாவாக, கலை- இசை நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தி, தமிழர்களின் தனித்துவத்தை நிலைநாட்ட வேண்டும்

 ↓தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, கச்சத்தீவை மீட்க வேண்டும்

 ↓வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., 200 அல்லது 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற, இன்றே புறப்படுவீர்; சாதனைகளை பாடுவீர். தி.மு.க., ஆட்சி வருங்காலங்களிலும் தொடர்ந்திடுவதை உறுதி செய்வீர்.

இவை உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us