ADDED : டிச 12, 2025 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.தி.மு.க., கூட்டணியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாதான் இயக்குகிறார். பா.ஜ., தலைமையில் இருப்போரும், அமித் ஷாவும் என்ன சொல்கின்றனரோ, அதைக்கேட்டு அ.தி.மு.க., இயங்கி வருகிறது. தமிழகத்தில், 'இண்டி' கூட்டணி வலிமையுடன் நீடிக்கிறது.
தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி, கடந்த 20 ஆண்டுகளாக நல்லிணக்கத்தோடு நீடிக்கிறது. வரும் 2026 சட்டபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறுவோம்.
காமராஜர் குறித்து அவதுாறு பரப்பியதாக, 'யு டியூபர்' முக்தார் அகமது மீது, கன்னியாகுமரி மாவட்ட போலீஸில் புகார் அளித்துள்ளோம். அவரை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.
இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடிதம் எழுதியுள்ளார். முக்தாரை உடனே கைது செய்ய வேண்டும்.
- ராஜேஷ்குமார். சட்டசபை காங்கிரஸ் குழு தலைவர்

