திமுக கவுன்சிலர் மளிகை கடையில் குட்கா விற்பனை:உணவு பாதுகாப்பு துறையினர் கடைக்கு சீல் வைப்பு
திமுக கவுன்சிலர் மளிகை கடையில் குட்கா விற்பனை:உணவு பாதுகாப்பு துறையினர் கடைக்கு சீல் வைப்பு
ADDED : ஜன 04, 2024 06:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்தூர்:சேலம் மாவட்டம், ஆத்தூர், மந்தைவெளி பகுதியில் 30வது வார்டு திமுக நகரமன்ற உறுப்பினர் சந்திரா.
இவரது கணவர் ராமச்சந்திரன், திமுக வார்டு செயலாளராக உள்ளார். இவரது மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான்பராக் பொருட்கள் உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் பதுக்கி விற்பனை செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டது இதனையடுத்து கடைக்கு சீல் வைக்க முயன்றபோது, உறவினர்கள் திரண்டு அதிகாரிகளை சிறை பிடித்தனர் போலீசார் அதிகாரியை மீட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.