தி.மு.க., ஆட்சியில் பட்டியலின பெண்கள் மீது வன்கொடுமை தினகரன் பேச்சு
தி.மு.க., ஆட்சியில் பட்டியலின பெண்கள் மீது வன்கொடுமை தினகரன் பேச்சு
ADDED : பிப் 23, 2024 02:53 AM

சிவகங்கை: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் பட்டியலின, பழங்குடியின பெண்கள்மீதான வன்கொடுமை அதிகரித்துள்ளதாக சிவகங்கையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் பேசினார்.
அவர் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. தமிழ்நாட்டில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்துஉள்ளது. கட்டுபடுத்த அரசு தவறிவிட்டது. காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கேட்பாரற்று கிடக்கிறது. முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்கவும் தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை. கனிமொழி, ஆ.ராஜா போன்றவர்கள் தான் பயனடைவார்கள். லோக்சபா தேர்தலுக்காக தமிழகத்தில் தற்போது ஏமாற்றும் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர்.
தி.மு.க., ஆட்சியில் அனைவரும் கண்ணீர் விடுகின்றனர். முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைத்தவர்களுக்கு துரோகம் செய்தவர். தேர்தலில் வெற்றி பெற பண மூட்டையுடன் பழனிசாமி சுற்றி வருகிறார்.
தேர்தலில் போட்டியிட நான் இன்னும் முடிவு எடுக்கவில்லை. தி.மு.க., ஆட்சியில் சிவகங்கை மாவட்டத்தில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது. தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் கருத்துக்கணிப்பு நடந்திருப்பது பொய்யான கருத்துகணிப்பு என்றார்.