தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி தி.மு.க., மனு

சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி தி.மு.க., மனு

சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி தி.மு.க., மனு


UPDATED : நவ 26, 2026 09:26 PM

ADDED : நவ 26, 2026 09:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 09:26 PM ADDED : நவ 26, 2026 09:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி கலெக்டர் வாக்குமூலம் செய்திக்கு பாக்ஸ்

மாவட்ட கலெக்டருக்கு, கள்ளக்குறிச்சி த.வெ.க., -– எம்.எல்.ஏ., ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பான வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி, தி.மு.க., முன்னாள் எம்.பி., கனிமொழி சோமு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மனு விபரம்:

இந்த விவகாரத்தில், முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொது வெளியில், முதல்வர் எந்தவிதமான தகவலையும் வெளியிடாமல் இருக்கிறார். இந்த விவகாரத்தில், விசாரணை நடத்துவதற்கு முன்பே, இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என, கருத்து தெரிவித்த, தமிழக சட்ட அமைச்சர், இவ்விவகாரம் தொடர்பாக, தி.மு.க., – எம்.பி., தெரிவித்த கருத்துக்களை விமர்சித்தும் பேசியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர், ‘கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., ஒரு அப்பாவி’ என்று கூறியிருந்தார். ஆபாச குறுஞ்செய்திய அனுப்பிய விவகாரத்தில், நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் அமைதியாக இருப்பது, வழக்கின் விசாரணை முறையாக நடக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இந்த விவகாரத்தில், அனைத்து தகவல்களும், மின்னணு முறையில் நடந்துள்ள நிலையில், வழக்கில் தகவல் தொழில்நுட்ப சட்டம் சேர்க்கப்படவில்லை. முதல்வர் மற்றும் தலைமை செயலர் அலுவலகத்தின் சி.சி.டி.வி., பதிவுகள், வருகை பதிவேடுகள், த.வெ.க., – எம்.எல்.ஏ.,வின் ‘வாட்ஸாப்’ பதிவுகள், மொபைல் போன் விபரங்கள் போன்றவற்றை, ஜூலை 31ம் தேதியில் இருந்து பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில், விசாரணை அதிகாரியாகவும், கண்காணிப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டு உள்ளவர்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் என்பதால், சுதந்திரமான விசாரணை நடக்காது. சிங்கப்பெண் அதிரடிப்படையும், எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. மாநில அரசும் எம்.எல்.ஏ.,-வை பாதுகாக்கிறது. எனவே, வழக்கு விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us