UPDATED : ஜூலை 20, 2024 05:45 PM
ADDED : ஜூலை 20, 2024 03:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோபி முன்னாள் எம்.பி., கோவையில் மரணமடைந்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம், 1996ம் ஆண்டு லோக்சபா தொகுதியாக இருந்த போது தி.மு.க., எம்.பி.,யாக இருந்தவர் சண்முகசுந்தரம், 80.இவரது சொந்த ஊர் கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள வெள்ளாங்கோவில். 1991 மற்றும் 2001ம் ஆண்டு கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்டார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால், சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அதிகாலை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு கனிமொழி, மதுமதி என்ற இருமகள்கள் உள்ளனர்.

