ADDED : டிச 31, 2025 07:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பா.ம.க.,வை பிளவுபடுத்த, தி.மு.க., பணம் கொடுத்துள்ளது. குறிப்பாக சிங்கப்பூரில், ராமதாஸ் தரப்புக்கு, 110 கோடி ரூபாய் கை மாறியிருக்கிறது.
தி.மு.க.,விடம் வாங்கிய பணத்துக்கு கணக்கு காட்டவேண்டும் என்பதற்காக, சேலத்தில் கூட்டியது தான், பொதுக்குழு, செயற்குழு கூட்டம்.
ராமதாஸ் உறவுகள், அன்புமணியை ஒருமை யில் பேசியது நாகரிகம் இல்லை. எங்களை அதேபோல பதிலடி கொடுக்க வேண்டாம் என அன்புமணி சொல்லியுள்ளார். அதனால் அடங்கி உள்ளோம்.
இல்லையென்றால் எங்களாலும் பேச முடியும். பொதுக்குழு கூட்டம் நடத்துவதாக நாடகமாடியுள்ளனர். டிச., 29ல், ராமதாஸ் கூட்டியது வெறுப்பு அரசியல் கூட்டம்.
- சதாசிவம்,
எம்.எல்.ஏ., - பா.ம.க.,

