UPDATED : ஏப் 08, 2025 03:23 AM
ADDED : ஏப் 08, 2025 03:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தே.மு.தி.க., தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தே.மு.தி.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், வரும் 30 ம் தேதி, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, வெள்ளிசந்தை கே.வி.மஹாலில் நடக்க உள்ளது.
இதில், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா பங்கேற்று, கட்சியின் எதிர்கால அரசியல் முடிவுகள், திட்டங்கள் குறித்து, ஆலோசனைகள் வழங்க உள்ளார். கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

