ADDED : ஜன 13, 2026 10:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், வரும் 20ம் தேதி சென்னை அறிவாலயத்தில் நடக்க உள்ளது.
சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசிக்க, 20ம் தேதி மாவட்டச் செயலர்கள் கூட்டம், நடக்க உள்ளது. கூட்டத்தில் மாவட்டச் செயலர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்க உள்ளனர். இத்தகவலை தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர், வரும் 19ம் தேதி முதல் பிப்., 15ம் தேதி வரை, கட்சி அமைப்பு ரீதியாக உள்ள மாவட்டங்களுக்கு சென்று, வணிகர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மீனவவர்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரையும் அழைத்து, கருத்து கேட்க உள்ளனர் என்றும், தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.

