அராஜகத்தின் உச்சத்தில் தி.மு.க., அரசு: பா.ஜ., கண்டனம்
அராஜகத்தின் உச்சத்தில் தி.மு.க., அரசு: பா.ஜ., கண்டனம்
ADDED : ஜன 13, 2026 07:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை:
தனியார் செய்தி தொலைக்காட்சியின் விவாத மேடையில், எதிர் கருத்துகளை முன்வைத்ததற்கு தமிழக பா.ஜ., இளைஞரணி தலைவர் சூர்யா மீது, குண்டர்களை வைத்து தி.மு.க., தாக்குதல் நடத்தியது.
நேற்று, தமிழக பா.ஜ., இளைஞரணி செயற்குழு உறுப்பினரான லால் பிரசாத்தை கைது செய்ததோடு, சூர்யா மீது வேப்பேரி காவல் நிலையத்தில் போலி வழக்குகளை தி.மு.க., அரசு பதிந்துள்ளது கண்டனத்திற்கு உரியது.
உலக தலைவர்கள் வரிசையில், மிக உயரிய நிலையில் இருக்கக்கூடிய பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க.,வினரை கண்டிக்காமல், இதுபோன்று ஜனநாயக படுகொலை செய்வது அராஜகத்தின் உச்சம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

