ADDED : மார் 17, 2026 02:08 AM
தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு, 1,100 டாக்டர்களை நியமிக்க போட்டி தேர்வு நடத்தப்பட்டதில், 320 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், 1,071 பேருக்கு ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளதாக, அப்பட்டமான பொய்யை தி.மு.க., அரசு கூறியிருக்கிறது. டாக்டர்கள் நியமனத்தில் மோசடிகளை அரங்கேற்றி, 751 டாக்டர்களுக்கு தி.மு.க., அரசு துரோகம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்ட 320 பேரின் பெயர்கள், இட ஒதுக்கீட்டு பிரிவு, தர வரிசை உள்ளிட்ட விபரங்களை தி.மு.க., அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
தேர்தல் கமிஷனின் அனுமதி பெற்று, மீதமுள்ள 751 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்க வேண்டும். இதை செய்ய தி.மு.க., அரசு தவறினால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், இந்த நியமனங்களில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்படும்.
- அன்புமணி, தலைவர், பா.ம.க.,
