ADDED : நவ 26, 2025 06:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காவிரி டெல்டா மாவட்டங்களில், இரண்டு லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள், மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன. அப்பயிர்களுக்கு இன்று வரை இழப்பீடு அறிவிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பயிர்களின் அளவு குறித்து, அரசு முரணான தகவல்களை வெளியிட்டு வருவதால், விவசாயிகளை ஏமாற்ற, தி.மு.க., அரசு முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை என்றால், விவசாயிகள் கடனாளிகளாக மாறி விடுவர்.
அன்புமணி, தலைவர், பா.ம.க.,

