sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு

/

தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு

11


ADDED : மே 01, 2025 11:37 AM

Google News

ADDED : மே 01, 2025 11:37 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பொய்யான வாக்குறுதிகள் கொடுத்துத் விவசாயிகளை ஏமாற்றி வரும் தி.மு.க., அரசு, இதற்கு மேலும் ஏமாற்ற முயற்சிப்பது நடக்காது என்று தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.

அவரது அறிக்கை:

கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையை டன் ஒன்றுக்கு ரூ. 3,550 ஆக உயர்த்தி வழங்கியுள்ள, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு, தமிழகக் கரும்பு விவசாயிகள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த 2015 - 16 ஆண்டுகளில் ரூ.2,300 ஆக இருந்த விலையை, கடந்த பத்து ஆண்டுகளில் ரூ.1,250 அதிகரித்து மத்திய அரசு வழங்குகிறது.

ஆனால், தனது 2021 தேர்தல் அறிக்கையில், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.4,000 வழங்கப்படும் என்று பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, நான்கு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், இன்று வரை கரும்பு விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது, கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.2,850 வழங்கியது மத்திய அரசு. மீதமுள்ள ரூ.1,150 விலையை சேர்த்து, விவசாயிகளுக்கு ரூ.4,000 ஆக திமுக அரசு வழங்கும் என்று ஒவ்வொரு ஆண்டும் தமிழக அமைச்சர்கள் பொய் கூறிக் கொண்டிருந்தார்கள்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக, ரூ.4,000 வழங்குவதாகக் கூறியது திமுக அரசு. தற்போது மத்திய அரசு கரும்பு ஒரு டன்னுக்கு, ரூ.3,550 வழங்குகிறது. இதனுடன் அந்த ரூ.1,150 சேர்த்து, ஒரு டன்னுக்கு ரூ.4,700 ஆக, கரும்பு விவசாயிகளுக்கு திமுக அரசு வழங்குவதுதான் நியாயம்.

ஒவ்வொரு ஆண்டும் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்துத் தமிழக விவசாயிகளை ஏமாற்றி வரும் திமுக அரசு, இதற்கு மேலும் தமிழக விவசாயிகளை ஏமாற்ற முயற்சிப்பது நடக்காது.

இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us