ADDED : ஆக 14, 2025 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் 35 மாவட்டங்களைச் சேர்ந்த, 207 பள்ளிகளில், ஒரு மாணவர் கூட இல்லை என கூறி, அப்பள்ளிகளை தி.மு.க., அரசு மூடும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
மொத்தம் 37,554 அரசு பள்ளிகளில், 52.75 லட்சம் மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். ஆனால், 12,970 தனியார் பள்ளிகளில், 63.42 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.
இதற்கான தீர்வு, அரசு பள்ளிகள் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பது தானே தவிர, பள்ளிகளை மூடுவது அல்ல. தி.மு.க., ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாக, அரசு பள்ளிகள், கல்லுாரிகளை சீரழித்து வருகிறது. வரும் தேர்தலில் தி.மு.க., அரசுக்கு, மக்கள் மூடுவிழா நடத்துவர்.
- அன்புமணி, தலைவர், பா.ம.க.,