ADDED : ஜூலை 30, 2025 04:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, 4,000 உதவிப் பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வுகள், ஜூலையில் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
ஆனால், திட்டமிட்டபடி அந்தத் தேர்வுகள் நடக்காது என்பது உறுதியாகியுள்ளது. இதனால், ஒரு உதவிப் பேராசிரியரைக் கூட நியமிக்காத உதவாத அரசு என்ற சிறுமையை, தி.மு.க., அரசு பெற்றுள்ளது.
உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு நடக்காததால், அந்த வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் பாதிக்கப்படுவர். அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் தரமான கல்வி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சுதந்திரத்திற்கு பின், தி.மு.க., ஆட்சியில்தான் தமிழகத்தின் உயர் கல்வி துறை மிக மோசமாக சீரழிக்கப்பட்டுள்ளது.
- அன்புமணி, தலைவர், பா.ம.க.,