ADDED : டிச 09, 2025 05:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் ஜாதி, மதம், இனம், மொழிக்கு அப்பாற்பட்டு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது. தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் நினைப்பது போன்ற காரியங்கள், வட மாநிலங்களில் வேண்டுமானால் ஈடேறலாம். தமிழகத்தில் அவர் நினைப்பது, பகல் கனவாக இருக்கும்.
நாங்கள் சனாதனத்தை அழிக்க வேண்டும் என்று கூறவில்லை. மக்களை பிளவுபடுத்தக் கூடாது என்றுதான் கூறுகிறோம். சமாதானத்தை போற்றும் தி.மு.க., அரசு; சனாதனத்தை தொடர்ந்து எதிர்க்கும். அ.தி.மு.க.,வில் ஆளாளுக்கு ஒரு கோணத்தில் பேசிக் கொண்டிருக்கின்றனர். தங்கள் கொள்கைகளை முழுதுமாக பா.ஜ.,விடம் அடிமைப்படுத்தி விட்டனர்.
பா.ஜ.,வைச் சேர்ந்த எச்.ராஜா பேச்சை யெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அவர், தரம் தாழ்ந்த அரசியல்வாதி. அவரைப் போன்றவர்கள் அரசியலில் இருப்பது, நேர்மையான அரசியல்வாதிகளுக்கு சாபக்கேடு.
- சேகர்பாபு, அறநிலையத்துறை அமைச்சர், தி.மு.க.,

