ADDED : ஆக 21, 2025 05:52 AM
குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு ௩௦ நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டாலே, மக்கள் பிரதிநிதிகள் பதவி இழக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. இது, எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் என, எதிர்க்கட்சியினர் புலம்புகின்றனர். இந்த சட்டம், எல்லாருக்கும் பொதுவானது. மக்கள் பிரதிநிதிகள் யார் குற்றம் செய்திருந்தாலும், தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும். பொது வாழ்வில், அரசியல்வாதிகளுக்கும் நேர்மை வேண்டும் என்பதற்காகவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கேட்டு, போராடி வருகின்றனர். ஆனால், அவர்களுக்காக குரல் கொடுப்பது போல பேசிக் கொண்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திடுமென ட்ராக் மாறி, அவர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது என பேசியிருக்கிறார். தி.மு.க., தலைமையின் திருப்திக்காக பேசுவதை திருமா வளவன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
- நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,

