நவ.20ம் தேதி! நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது தி.மு.க
நவ.20ம் தேதி! நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது தி.மு.க
ADDED : நவ 13, 2024 12:03 PM

சென்னை: நவ.20ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது;
ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வருகிற 20.11.2024 புதன்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும். அப்போது உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.
2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான முன் தயாரிப்புகள் குறித்து உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது.

