ADDED : ஜன 05, 2025 10:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை: திருவண்ணாமலை சென்ற தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.  அவருடன் அவரது கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர். இதனைத் தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.
இதன் பிறகு பெஞ்சல் புயல் பாதிப்பிற்கு உரிய நிவாரணம் வழங்காத தமிழக அரசை கண்டித்து தே.மு.தி.க., சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

