மது, கஞ்சா கொடுத்து தமிழகத்தை சீரழிக்கும் தி.மு.க.,
மது, கஞ்சா கொடுத்து தமிழகத்தை சீரழிக்கும் தி.மு.க.,
ADDED : மார் 21, 2026 07:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 2024ல், தமிழகத்தில் 19,965 தற்கொலைகள் நடந்துள்ளன. அவர்களில் 14,770 பேர் ஆண்கள்; 5,171 பேர் பெண்கள்; 24 பேர் திருநங்கையர். 71 சதவீத தற்கொ லைகளுக்கு, ஏதோ ஒரு வகையில், மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பழக்கம் தான் காரணம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மது குடிப்பதால் ஏற்படும் நோய்களால், தமிழகத்தில் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளி விபரங்களின்படி, தேசிய அளவில் அதிக தற்கொலை நிகழும் மாநிலங்களில், முதலிடத்தில் தமிழகம் உள்ளது. அதிக சாலை விபத்துகள் நிகழும் மாநிலமாகவும் உள்ளது. இதற்கு மதுவும் கஞ்சாவும் தான் காரணம். மது, கஞ்சாவை கொடுத்து தமிழகத்தை சீரழிக்கும் தி.மு.க.,வுக்கு, சட்டசபை தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்.
- -அன்புமணி,
தலைவர், பா.ம.க.,

