உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மார் 04, 2024 05:27 AM
அ நிறம் | அளவு
குன்றத்துார், : சென்னை, புறநகர் மாவட்டம், குன்றத்துார் கிழக்கு ஒன்றியம் அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், பரணிபுத்துாரில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில்,முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பங்கேற்று பேசியதாவது:-
ஜெயலலிதா நம்மிடம் இல்லாததற்கு காரணம் தி.மு.க., தான். ஜெயலலிதா ஊழல் செய்ததாக பொய்யான குற்றச்சாட்டு சுமத்தி, சிறைச்சாலையில் அடைத்து, உடல் நலக்குறைவு ஏற்படுத்தினர்.
லோக்சபா தேர்தலில் கூட்டணி கட்சிகள் இணையும். இரட்டை இலையில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., போட்டியிட தயாராக உள்ளது. மாபெரும் தைரியம் மிக்க பொதுச்செயலரை நாம் கொண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
