ADDED : ஜன 16, 2025 05:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : தி.மு.க., சட்டத்துறை சார்பில், மூன்றாவது மாநில மாநாடு, சென்னையில் நாளை மறுதினம் நடக்க உள்ளது.
'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டம், கவர்னர் ரவி விவகாரம் ஆகியவற்றை, சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்த கருத்தரங்கம், தி.மு.க., சட்டத்துறை சார்பில், சென்னையில் நாளை மறுதினம் மாநில மாநாட்டில் நடக்க உள்ளது.
கருத்தரங்கில், மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், 'ஹிந்து' ராம் போன்றோர் பங்கேற்று பேச உள்ளனர். கவர்னரை மாற்றக் கோரும் தீர்மானம் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
சென்னை பச்சையப்பன் கல்லுாரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில், மாநாடு நடக்கிறது.
முதல்வர் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார் என, தி.மு.க., சட்டத்துறை செயலர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார்.

