தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பாதுகாப்பு கோரி தி.மு.க., எம்.பி., மகன் வழக்கு

பாதுகாப்பு கோரி தி.மு.க., எம்.பி., மகன் வழக்கு

பாதுகாப்பு கோரி தி.மு.க., எம்.பி., மகன் வழக்கு


ADDED : நவ 05, 2024 07:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2024 07:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:தமிழக பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

எனது தந்தை திருச்சி சிவா, ராஜ்யசபா தி.மு.க., - எம்.பி.,யாக உள்ளார். நான் பா.ஜ.,வில் ஓ.பி.சி., அணி மாநில பொதுச்செயலராக இருந்தேன். தற்போது அக்கட்சியில் இல்லை.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விமர்சனத்திற்குரிய வகையில் பேசிய பல ஆடியோ பதிவுகளை சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக பதிவிட்டேன். இதனால் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர், எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் தொடர் மிரட்டல் விடுக்கின்றனர். எங்களை மர்ம நபர்கள் கண்காணிக்கின்றனர். எனக்கும், குடும்பத்தினருக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி போலீசாருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார் நாளை (நவ.,7)க்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us