வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசு: அண்ணாமலை
வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசு: அண்ணாமலை
ADDED : மார் 29, 2024 11:45 AM

ஸ்ரீபெரும்புதூர்: ‛‛ தி.மு.க., அரசு தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்த போது பேசுகையில், சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியனவே தி.மு.க., அரசின் சாதனை. சிப்காட் விவகாரம்- விவசாய நிலத்தை கையகபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் திமுக அரசு நடவடிக்கை எடுத்தது.
பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை குறைப்போம் என்ற வாக்குறுதியை தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. ஆனால், எந்தவித அறிவிப்பும் இன்றி பெட்ரோல், டீசல் விலையை பிரதமர் மோடி குறைத்துவிட்டார். பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்த இந்தியா, கடந்த 10 ஆண்டுகளில் 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இது தான் பா.ஜ., அரசின் சாதனை. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

