ADDED : அக் 24, 2024 07:51 PM
தி.மு.க., கூட்டணியில் காங், கம்யூ, வி.சி.க., பதவிக்காக சமரசம் செய்து கொள்வதால், தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேற வாய்ப்பில்லை. தேர்தல் நிதி கொடுத்துள்ளதால் நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை காங்., - கம்யூ.,- வி.சி., கண்டுகொள்வதில்லை.
திருமாவளவன் தி.மு.க.,விடம் நேரடியாக பேச முடியாமல் மாநாடு நடத்தி அழுத்தம் கொடுத்தார். ஆனால், தேர்தல் வரும் போது எம்.எல்.ஏ., - எம்.பி., சீட்டுகளுக்காக சமரசம் செய்து கொள்கின்றனர். அதனால் அவர்கள் கூட்டணியிலிருந்து வெளியே வர மாட்டார்கள்.
வெற்றி, தோல்வி, ஆட்சி, அதிகாரம் தாண்டி ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒருங்கிணைய வேண்டும். இனி பழனிசாமி கனவில் தான் முதல்வராக வர முடியும். தமிழகத்தில் 2026ல் கூட்டணி ஆட்சியே அமையும். எங்களின் தே.ஜ., கூட்டணியின் கூட்டணி ஆட்சி 2026ல் அமையும்.
தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,

