ADDED : நவ 07, 2025 07:28 AM

நகராட்சி துறை பணி நியமனத்தில், தலா 25 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளது. மொத்தம் எத்தனை கோடி லஞ்சம் பெறப்பட்டது என தெரியவில்லை. தமிழகமே குட்டிச்சுவராக உள்ளது. ஓட்டுக்கு 5,000 ரூபாய் கொடுக்க தி.மு.க.,வினர் திட்டமிட்டுள்ளனர். ஒரு ஓட்டுக்கு 50,௦௦௦ ரூபாய் கொடுத்தால் கூட தி.மு.க.,விற்கு மக்கள் ஓட்டளிக்க மாட்டார்கள். கூட்டணி தர்மம் என்ற பெயரில், தி.மு.க., கூட்டணி கட்சிகள் வாய் திறக்க மறுக்கின்றன.
தேர்தல் ஆணையம் கொண்டு வந்திருக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் எந்த குழப்பமும் இல்லை. ஆனால், அதில், தி.மு.க., முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது. அதனால் தான், 38 கலெக்டர்களிடமும் அ.தி.மு.க., சார்பில் புகார் அளித்துள்ளோம். இந்த பணியை எதிர்த்து தி.மு.க., வழக்கு தொடர்ந்துள்ளது. ஆனால், படிவங்களை பெற தி.மு.க.,வினர் ஆர்வம் காட்டுகின்றனர். இதன் வாயிலாக, ஸ்டாலின் பேச்சை தி.மு.க., தொண்டர்கள் கேட்பதில்லை என தெரிகிறது.
- உதயகுமார் முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,

