தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சேற்றில் புதைந்த தி.மு.க.,வினரின் வாகனங்கள்

 சேற்றில் புதைந்த தி.மு.க.,வினரின் வாகனங்கள்

 சேற்றில் புதைந்த தி.மு.க.,வினரின் வாகனங்கள்


ADDED : பிப் 12, 2026 01:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 01:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாம்பரம்: சென்னை, விழுப்புரம் மண்டலங்களுக்கான தி.மு.க., ஓட்டுச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாடு, செங்கல்பட்டு மாவட்டம், திருவிடந்தையில் நேற்று நடந்தது.

இதற்காக ஏற்பாடு செய்த வாகன நிறுத்தம் எண் 6ல், 150க்கும் மேற்பட்ட பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

கூட்டம் முடிந்ததும், அந்த வாகனங்களை வெளியே எடுத்தபோது, அப்பகுதி சேறும், சகதியுமாக இருந்ததால், அதில் சிக்கிக்கொண்டன. வாகனங்களில் வந்த பெண்கள், முதியோர் மற்றும் தொண்டர்கள் தவித்தனர்.

'கிரேன்' எடுத்து வரப்பட்டு, சேற்றில் சிக்கிய வாகனங்களை வெளியே எடுத்தனர். ஆனால், கிரேனும் சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றுவிட்டது.

தவியாய் தவித்த தொண்டர்களே, வாகனங்களுக்கு அடியில் கற்களை போட்டு, மெல்ல மெல்ல வெளியே எடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us