'பா.ஜ., ஆதரவு தேவை என்றால் முதல்வர் அரவணைப்பார்!'
'பா.ஜ., ஆதரவு தேவை என்றால் முதல்வர் அரவணைப்பார்!'
ADDED : ஆக 20, 2024 06:37 AM

சென்னை: “பா.ஜ., ஆதரவு தேவை என்றால் அரவணைப்பர்; தேவையில்லை என்றால் திட்டுவர்,” என, தி.மு.க.,வை விமர்சித்தார் தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா.
அவர் கூறியதாவது:
ஆளுங்கட்சியினருக்கு பா.ஜ., ஆதரவு தேவை என்றால் அரவணைப்பர். தேவையில்லை என்றால், என்னென்ன வார்த்தைகள் இருக்கிறதோ, அதையெல்லாம் சொல்லி திட்டுவர்.
தேர்தலுக்கு முன்ஒரு நிலைப்பாடு; வெற்றி பெற்ற பின் ஒரு நிலைப்பாடு எடுப்பதுதான் திராவிட மாடல் அரசு.
கருணாநிதிக்கு 100 ரூபாய் நாணயம் வெளியிடுவதிலும், மகன் உதயநிதியை துணை முதல்வர் ஆக்குவதிலும் மட்டுமே முதல்வர் கவனம் செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க., கூட்டணி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்; இது எந்த வகையில் நியாயம்?
பட்ஜெட்டில் தமிழகத்துக்கு முறையாக பணம் ஒதுக்கவில்லை எனக் கூறி, 'நிடி ஆயோக்' கூட்டத்திற்கு செல்லாமல் முதல்வர் புறக்கணித்தார்.
இப்போது, மகிழ்ச்சியாக இருக்கிறேன் என பேசுகிறார்.
அப்படியென்றால், தமிழகத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு கொடுத்து விட்டதா?
மெட்ரோ ரயில், பாதாள சாக்கடை, மழைநீர் கால்வாய் பணிகளால், சென்னையில் சாலைகள் மோசமாக உள்ளன. பருவமழைக்குள் அவற்றை சரிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

