ADDED : ஜன 02, 2025 08:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள பெரியார் நகரில் குடியிருப்பு பகுதியில் குடிநீர் பைப்லைனுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும், பஸ் நிறுத்த திறப்பு விழாவும் நடந்தது.
நிகழ்ச்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டார். அவரை வரவேற்க சாலையோரமாக, 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஆரத்தி தட்டுடன் நின்று, ஆரத்தி எடுத்து பொட்டு வைத்தனர். பின், அமைச்சரின் உதவியாளர் ராஜேந்திரன், தட்டு ஏந்தி வந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூபாய் நோட்டை வழங்கினார்.

