தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ராமேஸ்வரத்தில் இன்று தி.மு.க., ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரத்தில் இன்று தி.மு.க., ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரத்தில் இன்று தி.மு.க., ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 10, 2024 06:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2024 06:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டித்து, ராமேஸ்வரத்தில் இன்று தி.மு.க.,வின் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

தி.மு.க., தலைமை அறிக்கை:

கடந்த, 10 ஆண்டுகளில் மட்டும் இலங்கை கடற்படையினரால், 3,076 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்; 534 படகுகள் கடத்தப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் குறித்தும், மீனவர் நலன் குறித்தும் முதல்வர் பல்வேறு சந்தர்ப்பங்களில், பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்தி உள்ளார்.

பிரதமருக்கு, ஒன்பது கடிதங்களும், வெளியுவுறத்துறை அமைச்சருக்கு, 35 கடிதங்களும் எழுதியுள்ளார். ஆனாலும், தமிழக மீனவர்கள் பிரச்னையை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையாடு கையாண்டு வருகிறது. இலங்கை அரசின் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. மத்திய அரசை கண்டித்து இன்று 11ம்தேதி காலை, 10:30 மணிக்கு ராமேஸ்வரத்தில் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் கண்டன ஆர்ப்பட்டம் நடக்கும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us