ADDED : ஜூலை 11, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'முதல்வர் ஸ்டாலின் கல்லுாரிகள் திறந்ததை, கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை கண்டித்து, வரும் 14ல் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, தி.மு.க., மாணவர் அணி அறிவித்துள்ளது.
அதன் செயலர் ராஜிவ்காந்தி அறிக்கை:
கோவில்களுக்கு மக்கள் காணிக்கையாக கொடுக்கும் உபரி நிதியிலிருந்து, கல்வி நிலையங்கள், சிறார், முதியோர், பாரமரிப்பு நிலையங்கள், மருத்துவமனைகள் அமைக்கலாம் என்பது, ஹிந்து அறநிலையத்துறை சட்டங்களில் ஒன்று.
அதுகூடத் தெரியாமல் திராவிட இயக்கத்தின் துரோகியாக, கல்விக்காக எடுக்கும் முன்னெடுப்புகளை கொச்சைப்படுத்தும் விதமாக, கோவையில் பழனிசாமி பேசியுள்ளார்.
அவரை கண்டித்து வரும் 14ம் தேதி, கோவை டாடாபாத் சிவானந்தா காலனியில், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.