தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ காது குத்தும் தி.மு.க., வீடியோ வௌியிட்ட அ.தி.மு.க.,

 காது குத்தும் தி.மு.க., வீடியோ வௌியிட்ட அ.தி.மு.க.,

 காது குத்தும் தி.மு.க., வீடியோ வௌியிட்ட அ.தி.மு.க.,


ADDED : பிப் 19, 2026 03:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 03:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களுக்கு காது குத்துகிறது தி.மு.க., அரசு' என விமர்சனம் செய்து, அ.தி.மு.க., 'வீடியோ' வெளியிட்டு உள்ளது.

தமிழக சட்டசபையில் கடந்த 17ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, 'ஆண்டுதோறும் பட்ஜெட் என்ற பெயரில், தி.மு.க., அரசு மக்களுக்கு காது குத்தி வருகிறது' என, பட்ஜெட்டை விமர்சித்து, 'மாபெரும் காது குத்தும் விழா' என அழைப்பிதழ் அச்சடித்து, அதை ஏந்தியபடி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வந்தனர்.

இந்நிலையில், 'நீட்' தேர்வு ரத்து, 5.5 லட்சம் அரசு வேலைகள், 100 ரூபாய் காஸ் மானியம், மதுவிலக்கு அமல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை தி.மு.க., அரசு நிறைவேற்றாமல், மக்களுக்கு காது குத்தி வருவதாக விமர்சனம் செய்து, அ.தி.மு.க.,வினர் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், முதல்வர் ஸ்டாலின், மக்களை தேடிப் போய் காது குத்துவது போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டு உள்ளன. இந்த வீடியோவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தி.மு.க., தரப்பிலும் ஒரு வீடியோ தயாராகி வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us