தேனி தொகுதியில் தி.மு.க., தோற்றால் ராஜினாமா; அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு
தேனி தொகுதியில் தி.மு.க., தோற்றால் ராஜினாமா; அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு
ADDED : மார் 25, 2024 10:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தோற்றால் மறுநாளே அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவிகளை ராஜினாமா செய்து விடுவேன்; அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார்.
தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் களமிறங்கி உள்ளார். அவருக்கு எதிராக பாஜக கூட்டணி சார்பில் டிடிவி தினகரன், அதிமுக சார்பில் நாராயணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் அறிமுக கூட்டம் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பி.முர்த்தி, தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் வெல்லாவிட்டால் நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் எனக் கூறினார்.

