sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கூட்டணிக் கட்சி பற்றி பொது வெளியில் விவாதிக்கக்கூடாது; நிர்வாகிகளுக்கு திமுக 'கடிவாளம்'

/

கூட்டணிக் கட்சி பற்றி பொது வெளியில் விவாதிக்கக்கூடாது; நிர்வாகிகளுக்கு திமுக 'கடிவாளம்'

கூட்டணிக் கட்சி பற்றி பொது வெளியில் விவாதிக்கக்கூடாது; நிர்வாகிகளுக்கு திமுக 'கடிவாளம்'

கூட்டணிக் கட்சி பற்றி பொது வெளியில் விவாதிக்கக்கூடாது; நிர்வாகிகளுக்கு திமுக 'கடிவாளம்'


ADDED : ஜன 27, 2026 07:34 PM

Google News

ADDED : ஜன 27, 2026 07:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிக்கட்சியினர் தொடர்பான கருத்துகளை கட்சி நிர்வாகிகள் பொதுவெளியில் விவாதிப்பதை முழுமையாகத் தவிர்த்திட வேண்டும்.

தமிழக சட்டசபை தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற சூழல் காணப்படுகிறது. பாஜ, அதிமுக இணைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியானது, தமிழக தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தயாராகி விட்டது. கிட்டத்தட்ட தேஜ கூட்டணி இறுதி வடிவம் பெற்றுவிட்ட நிலையில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் கடும் குழப்பம் நிலவி வருகிறது.

குறிப்பாக, காங்கிரசுடனான கூட்டணி குறித்து திமுகவினரும், மறுபுறம் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளும் மாறி, மாறி கருத்துகளை பரிமாறி வருகின்றனர். பூத் கமிட்டிக்கு ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ் என்று திமுக எம்எல்ஏ கோ. தளபதி சில நாட்கள் முன்பு கடுமையாக விமர்சித்து இருந்தார். அவரின் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கடும் கண்டனமும், அதிருப்தியையும் வெளிப்படுத்தி இருந்தனர்.

இருதரப்பினரின் இந்த பேச்சுகள், தமிழக அரசியல் களத்தில் திமுக கூட்டணி தெளிவற்ற நிலையில் இருப்பது போன்ற சமிக்ஞைகளை காட்ட, கூட்டணி குறித்தோ, கூட்டணி கட்சி குறித்தோ திமுகவினர் எந்த கருத்துகளையும் பேசக்கூடாது என்று திமுக தலைமை கடிவாளம் போட்டு உள்ளது. அனைத்து முடிவுகளையும் கட்சியின் தலைவர் ஸ்டாலினே அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை;

கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிக்கட்சியினர் தொடர்பான கருத்துகளை கட்சி நிர்வாகிகள் பொதுவெளியில் விவாதிப்பதை முழுமையாகத் தவிர்த்திட வேண்டும்.

தேவையற்ற சர்ச்சைகளினால் எவ்வித பலனும் இல்லை என்பதால் ஆக்கப்பூர்வமான கட்சி பணிகளில் கவனம் செலுத்தி தேர்தல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும்.

கூட்டணி தொடர்பான முடிவுகளை கட்சித் தலைவர் உரிய நேரத்தில் அறிவிப்பார்.

இவ்வாறு ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us