தி.மு.க., பிரசாரத்தில் அண்ணாமலைக்கு ஆதரவு: தகவல் அறிந்ததும் தலைமை அதிர்ச்சி
தி.மு.க., பிரசாரத்தில் அண்ணாமலைக்கு ஆதரவு: தகவல் அறிந்ததும் தலைமை அதிர்ச்சி
ADDED : ஏப் 17, 2024 07:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரையில் தி.மு.க., கூட்டணி வேட்பாளர் வெங்கடேசனுக்கு ஆதரவாக நகருக்கு உட்பட்ட மதுரை வடக்கு, மத்தி, தெற்கு, மேற்கு ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளில் தி.மு.க., இளைஞரணி சார்பில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில், 18 முதல் 25 வயதுக்கு உட்பட்ட நடுநிலை இளைஞர், பெண்கள் என, 1 லட்சம் பேரை தனித்தனியே சந்தித்தனர்.
அவர்களிடம் ஆளுங்கட்சி திட்டங்களை விளக்கிய பின், தற்போதைய அரசியல்களம் குறித்து 'பீட்பேக்' கேட்டு பதிவு செய்துள்ளனர். அதில் ஆளுங்கட்சி திட்டங்களை பாராட்டிய இளைஞர்களில் ஒரு பகுதி பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் பேச்சு, செயல்பாடு தங்களை ஈர்த்துள்ளதாக தெரிவித்த கருத்துக்களை...

