மத்திய அரசு திட்டங்களுக்கு புதுப்பெயர் வைக்கும் தி.மு.க., அரசு: அண்ணாமலை சாடல்
மத்திய அரசு திட்டங்களுக்கு புதுப்பெயர் வைக்கும் தி.மு.க., அரசு: அண்ணாமலை சாடல்
ADDED : பிப் 20, 2024 06:06 PM

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு தி.மு.க., அரசு புதுப்பெயர் வைத்து வெளியிடுகின்றனர் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது: 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மத்திய அரசு திட்டங்களின் பெயரை மாற்றி புது ஸ்டிக்கர் ஒட்டுவதைத் தான் மாநில அரசு வாடிக்கையாக செய்கிறது.
பிரதமர் வீட்டு வசதி திட்டம், கருணாநிதி கனவு இல்லமாக மாறி உள்ளது. தமிழகத்தில் 20 இடங்களில் பசுமை வழிச்சாலை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாநில அரசு, புதிதாக பசுமை சாலை என கொண்டு வருகின்றனர். சஹி நிவாஸ் என 10 க்கும் மேற்பட்ட இடங்களில் மகளிருக்காக மத்திய அரசு சார்பில் விடுதிகள் செயல்படுகின்றன. தமிழகத்தில் தோழி விடுதி என பெயர் மாறி உள்ளது.
விஸ்வகர்மா யோஜனா திட்டம் 4 ஆண்டு வரை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது, இங்கு கைவினைக் கலைஞர் திட்டம். உண்மை சரிபார்ப்பு குழு, அரசு சொல்லும் பொய்யை எப்படி சமாளிக்கிறார்கள் என்பது வாடிக்கையாக உள்ளது.
போஷாக் அபியான் என்ற மத்திய அரசின் திட்டம் தான் ஊட்டச்சத்து உறுதி செய்யும் தமிழக அரசின் திட்டம்.
சமகிரஹ சிக்சா, பேராசிரியர் அன்பழகன் திட்டமாக மாறி உள்ளது. மாநில அரசு பெயரை மாற்றி மாற்றி வைத்தாலும், மத்திய அரசு 4 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்த திட்டங்களுக்கு புதுப்பெயர் வைத்து வெளியிடுகின்றனர்.
பட்ஜெட்டில் தமிழக கடன் சுமையில் உள்ளது என்பதை உணர்த்துகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சொந்த வரி வசூல் 19 சதவீதம் வளரும் என சொன்னார்கள். 12 சதவீதம் தான் வளர்ந்துளளது. தமிழகம் வளரவில்லை என்பதை ஒப்புக் கொண்டுகின்றனர்.அடையாறு ஆற்றை சுத்தப்படுத்த தற்போது 1,500 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளனர். போன வருடம் ஒதுக்கியது என்ன ஆனது.
மண் பரிசோதனை திட்டத்தை 2015ல் கொண்டு பிரதமர் கொண்டு வந்தார். பல விவசாயிகள் பலனடையும் போது, தமிழக அரசு இன்று அறிமுகம் செய்கிறது. மாநில அரசு என்ன குழப்பினாலும் மத்திய அரசு நிதி ஒதுக்கியது என மக்கள் அறிவார்கள். ரசாயனத்தில் இருந்து வெளியே வருவோம் எனக்கூறுகிறார்கள். மோடி 5 ஆண்டுக்கு முன்பே கூறினார்.தமிழக பட்ஜெட்டில் எதுவும் இல்லை. வேளாண்பட்ஜெட் ஒன்றுமே கிடையாது என்பது தான் நிதர்சனமான உண்மை.
பல்லாவரம் சட்டசபை தொகுதியில் ரயில் பாதைக்கு கீழே 17 ஆண்டுகளாக சுரங்கப்பாதை அமைத்து வருகின்றனர். திராவிட மாடல் அரசுக்கு உண்மையான பெயர் திராவிட ஆமை அரசு. எந்த வேலையையும் வேகமாக செய்வது கிடையாது. மெட்ரோ திட்டம் பொறுத்தவரை, மத்திய அரசு பாரபட்சம் பார்க்காமல் அனைத்து மாநிலங்களையும் சமமாக பார்க்கிறது. வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது.
50 ஆண்டு கால கடன் உள்ளிட்டவற்றை தமிழக அரசு தான் அதிகம் பயன்படுத்தி உள்ளது. ஆனால், நிலம் கையகபடுத்துதலில் மெதுவாக செயல்படுகிறது. இதனை மறைக்க மெட்ரோ திட்டத்தில் மத்திய அரசு மீது குற்றம்சாட்டுகின்றனர். மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டத்திற்கு பணம் கொடுத்துள்ளது. மெட்ரோ ரயிலுக்காக வந்த பணம் அனைத்தையும் செலவழித்துவிட்டீர்களா
தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை எல்.முருகன் உள்ளிட்டோர் சந்தித்து பேசி உள்ளனர். இரு நாட்டு குழுவினரை சந்தித்து பேச ஏற்பாடு செய்வதாக ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார். மீனவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்.
கடந்த 2 ஆண்டுகளில் உலகளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்துள்ள ஒரே நாடு இந்தியா மட்டும் தான். மக்களவைத் தேர்தல் கூட்டணி அமைப்பத்றகு பாஜவின் கதவுகள் மட்டுமல்ல, ஜன்னல்கள் கூட திறந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என வாக்குறுதி அளித்த திமுக., அதனை நிறைவேற்றவில்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

