ADDED : பிப் 19, 2026 03:51 AM
சென்னை: 'தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம்' என, அக்கட்சியின் பொதுச்செயலரும், அமைச்சருமான துரை முருகன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோர், நாளை முதல், மார்ச் 2ம் தேதி வரை, தி.மு.க., தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம்.
பொதுத் தொகுதிக்கு 25,000 ரூபாய், மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு 15,000 ரூபாய் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள், கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருந்தால், அவர்களின் விண்ணப்ப கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும். விண்ணப்ப படிவத்தை தலைமை அலுவலகத்தில், 1,000 ரூபாய் வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

