ADDED : ஆக 20, 2025 01:58 AM

சென்னை:தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி.,யின் மனைவியும், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி, 79, சென்னையில் காலமானார்.
நுரையீரல் பாதிப்பு காரணமாக, தனியார் மருத்துவமனையில், எட்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த இவர், இரண்டு வாரங்களுக்கு முன், சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி, உயிரிழந்தார்.
அவரது உடல், சென்னை தி.நகர் ராமன் தெருவில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, துணை முதல்வர் உதயநிதி, மருமகன் சபரீசன், அமைச்சர்கள் நேரு, வேலு, தியாகராஜன், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள், மறைந்த ரேணுகாதேவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பா.ம.க., தலைவர் அன்புமணி, ம.நீ.ம., தலைவர் கமல் மற்றும் தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.