கூட்டணி கட்சிகளாலேயே 2026ல் தி.மு.க.,வுக்கு கண்டம்
கூட்டணி கட்சிகளாலேயே 2026ல் தி.மு.க.,வுக்கு கண்டம்
ADDED : ஜன 11, 2025 07:17 PM
தமிழகத்தில் டங்க்ஸ்டன் தொழிற்சாலை வருவதற்கு வாய்ப்பில்லை என, மத்திய அமைச்சர் தெளிவாக கூறி விட்டார். டெண்டருக்கு அனுமதி கொடுத்துவிட்டு, அதை எதிர்ப்பது போல் தி.மு.க., அரசு நாடகமாடுகிறது. மத்திய அரசு 7,000 கோடி ரூபாய்க்கு மேல், தமிழக அரசுக்கு ஜி.எஸ்.டி., வரியில் பங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு, 1,000 ரூபாய் கொடுத்தால் என்ன? என்ற கேள்விக்கு, 'தேர்தலில் சூரியன் உதிப்பதற்கு, தேர்தல் அருகே கொடுப்போம்' என, துரைமுருகன் சொல்கிறார். அப்பட்டமான அரசியல் இது.
பிரதமர் மோடி ஆந்திர மக்களுக்கு, பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை கொடுத்துள்ளார். அதேபோல், 'டபுள் இன்ஜின்' அரசு தமிழகத்தில் இருந்தால், எவ்வளவு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர முடியும்.
கூட்டணி கட்சிகளால் தி.மு.க., அரசுக்கு கண்டம் வரும். திராவிட மாடலுக்கு 2026ல் முடிவுரை எழுதப்படும்.
தமிழிசை, மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,

