தீபத்துாணை 'சலவை கல்' என்று கூட தி.மு.க., சொல்லும்
தீபத்துாணை 'சலவை கல்' என்று கூட தி.மு.க., சொல்லும்
ADDED : டிச 13, 2025 06:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த 2021 தேர்தலில், 525 வாக்குறுதியை கொடுத்த ஸ்டாலின், 10 சதவீதம் மட்டுமே நிறைவேற்றிவிட்டு, 100 சதவீதம் நிறைவேற்றியதாக பச்சை பொய்யை தொடர்ந்து கூறுகிறார். திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்ற, உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தும் கூட, தீபம் ஏற்றுவதை தடுத்து 'சர்வே கல்' என கூறி வருகின்றனர். அதை, துணி துவைக்கும் 'சலவை கல்' என்று கூட தி.மு.க., பிரசாரம் செய்யும். சர்வே கல் எந்த நாட்டில் 10 அடி உயரத்தில் பீடத்துடன் இருக்கிறது?
'எங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கினால், உச்ச நீதிமன்றம் வரை சென்று நீதித்துறையை அச்சுறுத்துவோம்' என்கிறது தி.மு.க., அரசு. 'நாங்கள் விரும்பிய தீர்ப்பு வந்தால் அது வழங்கிய தீர்ப்பு; விரும்பாத தீர்ப்பு வந்தால் அது வாங்கப்பட்ட தீர்ப்பு' என, முன்னாள் முதல்வர் கருணாநிதியே சொன்னது. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற நிலையிலேயே தி.மு.க., அரசு இருக்கிறது.
- உதயகுமார்,
முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,

