sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓட்டுகளை தி.மு.க., இழக்கும்'

/

'அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓட்டுகளை தி.மு.க., இழக்கும்'

'அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓட்டுகளை தி.மு.க., இழக்கும்'

'அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓட்டுகளை தி.மு.க., இழக்கும்'

38


UPDATED : மே 04, 2025 08:04 AM

ADDED : மே 04, 2025 07:43 AM

Google News

UPDATED : மே 04, 2025 08:04 AM ADDED : மே 04, 2025 07:43 AM

38


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: ''அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓட்டுக்களை முதல்வர் ஸ்டாலின் இழந்து வருகிறார்'' என தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் அண்ணாமலை தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் அவர் அளித்த பேட்டி: தி.மு.க., ஆட்சி அமைந்ததும் பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் என தெரிவித்து விட்டு, தற்போது குழு அமைத்திருப்பதாகவும், அதன் அறிக்கையை செப்டம்பரில் அமல்படுத்துவோம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் 9 அறிவிப்புகளையும் ஆணையாக வெளியிட்டு அமல்படுத்த வேண்டும்.

கொரோனாவின் போது முடக்கப்பட்ட அகவிலைப்படி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், விடுப்புக்களை பணமாக்கலாம் என முன்னாள் முதல்வர் கருணாநிதி தெரிவித்த அறிவிப்பு, தற்போது 4 ஆண்டுகால ஆட்சிக்குப் பின்பும் வழங்கப்படவில்லை.

இப்படிப்பட்ட காரணங்களால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓட்டுகளை முதல்வர் ஸ்டாலின் இழந்து வருகிறார். இதனால் 200 தொகுதிகள் வெற்றி என்பது தி.மு.க.,வுக்கு சாத்தியமாக வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us