காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு; முதல்வர் ஸ்டாலின்
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு; முதல்வர் ஸ்டாலின்
ADDED : நவ 08, 2025 06:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை; காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு, திராவிடம் மீண்டும் வெல்லும் என்று திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு;
அறிவை மையப்படுத்தி ஆட்சியைப் பிடித்து, அறிவொளியை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதையே தலையாய கடமையாக ஆற்றி வரும் திமுகழகத்தின் சாதனையை இனி எவராலும் இம்மண்ணில் படைக்க முடியாது.
கருப்பும் - சிவப்பும் - நீலமும் ஒன்றிணைந்து நிற்கும்போது எப்படிப்பட்ட எதிரியும் இங்கு வாலாட்ட முடியாது என உணர்த்தும் கொள்கை மேடையாக திமுக 75அறிவுத் திருவிழாவை ஏற்பாடு செய்த உதயநிதி, துணைநின்ற இளைஞரணியினருக்கு பாராட்டுகள்.
திராவிடம் வெல்லும், மீண்டும் மீண்டும் வெல்லும்! அதைக் காலம் சொல்லும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தமது பதிவில் கூறி உள்ளார்.

