sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

யார், எங்கே, எப்போது சடலமாக கிடப்பார்கள் என்ற அவலத்தில் திமுக ஆட்சி: இபிஎஸ் குற்றச்சாட்டு

/

யார், எங்கே, எப்போது சடலமாக கிடப்பார்கள் என்ற அவலத்தில் திமுக ஆட்சி: இபிஎஸ் குற்றச்சாட்டு

யார், எங்கே, எப்போது சடலமாக கிடப்பார்கள் என்ற அவலத்தில் திமுக ஆட்சி: இபிஎஸ் குற்றச்சாட்டு

யார், எங்கே, எப்போது சடலமாக கிடப்பார்கள் என்ற அவலத்தில் திமுக ஆட்சி: இபிஎஸ் குற்றச்சாட்டு

2


ADDED : நவ 08, 2025 05:57 PM

Google News

2

ADDED : நவ 08, 2025 05:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; யார், எங்கே, எப்போது சடலமாகக் கிடப்பார்கள்? என்று தெரியாத அவல நிலை தான் திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு என்று எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி உள்ளதாவது;

மயிலாடுதுறை மாவட்டம் அரசலங்குடி பகுதியில் போதையில் இருந்ததாகக் கூறப்படும் நபர்கள் சிலர் பள்ளிப் பஸ்சை தாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

அதேபோல், நாகை மாவட்டம் செல்லூர் கிழக்கு கடற்கரைச் சாலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வி.ஏ.ஓ ராஜாராமன் என்பவர் தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன.

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், பட்டப்பகலில், நடுரோட்டில் சர்வ சாதாரணமாக குற்றச் செயல்கள் அரங்கேறுவது தொடர் கதையாகியுள்ளது. பஸ் மீதான தாக்குதலில் குழந்தைகளுக்கு ஏதாவது ஆகியிருந்தால் அதற்கு யார் பொறுப்பு?

ஒரு பஸ் கூட சாலையில் பாதுகாப்பாக செல்ல முடியாத அவல நிலைக்கு முதல்வர் என்ன பதில் வைத்திருக்கிறார்? யார், எங்கே, எப்போது சடலமாகக் கிடப்பார்கள்? என்று தெரியாத அவல நிலை தான் திமுக ஆட்சியின் 'சட்டம்- ஒழுங்கு'.

குற்றவாளிகளைப் பிடிக்கத் திணறுவது, பிடித்தாலும் அவர்களை சிறையில் வைத்திருக்க வக்கில்லாமல் வெளியே அனுப்பி, இன்னும் பலக் குற்றங்களை அவர்கள் செய்வதை கைகட்டி வேடிக்கைப் பார்ப்பது இப்படி நடத்தப்படும் ஸ்டாலின் ஆட்சியைக் கண்டு எப்படி குற்றவாளிகளுக்கு பயம் வரும்?

குற்றவாளிகளை குஷியாக்கி, மக்களை பயத்தில் ஆழ்த்தும் அளவிற்கு சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்த திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மயிலாடுதுறை பஸ் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீதும், திருவாய்மூர் வி.ஏ.ஓ.வாக இருந்த ராஜாராமன் மரணத்தை விசாரித்து, அதில் தொடர்புள்ளோர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமது பதிவில் இபிஎஸ் கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us