ADDED : நவ 01, 2025 05:03 AM
பூத் கமிட்டி நியமனம் தி.மு.க., தான் சாதனை தி.மு.க., இல்லையென்றால், அ.தி.மு.க., தான் ஆட்சிக்கு வருகிறது. இதனால், பா.ஜ.,வுக்கு இங்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. அதனால், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியை அறிவித்து, அதை செயல்படுத்துவதன் வாயிலாக, தி.மு.க.,வை வீழ்த்த நினைக்கின்றனர். அதாவது, தி.மு.க.,வுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் தலித், இஸ்லாமியர், கிறிஸ்துவர் வாக்காளர்களை நீக்குவது என்ற திட்டத்தோடு, இப்பணியை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளனர். பீஹாரில் இப்படிப்பட்ட பணி வாயிலாக 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர்.
அதேபோலவே, தமிழகத்தில் செய்ய வேண்டும் என திட்டம் போட்டு களம் இறங்கி உள்ளனர். இந்தியாவில் இருக்கும் அரசியல் கட்சிகளில் இதுவரை இல்லாத அளவிற்கு, 68,000 ஓட்டுச்சாவடி முகவர்களை நியமனம் செய்து, அதை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்துள்ள ஒரே கட்சி, தி.மு.க., தான். - செங்குட்டு வன், மாநில செயலர், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, தி.மு.க .,

