ADDED : டிச 28, 2024 07:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்:சென்னை அண்ணா பல்கலையில் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு, சாட்டையால் அடித்துக் கொண்டார் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை.
இந்நிலையில், தி.மு.க.,வை சேர்ந்த தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை பேரூராட்சி 3வது வார்டு கவுன்சிலர் பாண்டியம்மாளின் கணவர் ராம்பிரகாஷ், அய்யம்பேட்டை பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வந்தார்.
சாட்டையடி மேற்கொண்ட அண்ணாமலைக்கு எதிராக கோஷமிட்டபடியே, தன் தலையில் 150 முட்டைகளை உடைத்துக் கொண்டார்.

