ADDED : மார் 17, 2025 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக அரசின் பட்ஜெட்டை விமர்சிப்பவர்கள், காமாலை கண்கள் உடையவர்கள் என, அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். எந்த காமாலை கண்ணோடு, மத்திய பட்ஜெட்டை இவர்கள் விமர்சித்தனர். 'ரூ' போட்ட பட்ஜெட்டுக்கு எல்லாம், 'ஓ' போட்டு வியப்பில் வாழ்த்த முடியாது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில், நாளை டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடக்க உள்ளது. தி.மு.க.,வின் ஊழலை வைத்து புத்தகமே எழுதலாம் என விஜய் கூறியது சரி தான். புத்தகமல்ல, தி.மு.க.,வின் ஊழலை வைத்து திரைப்படமே எடுக்கலாம்.
- தமிழிசை சவுந்தரராஜன்,
தமிழக பா.ஜ.,
முன்னாள் தலைவர்