ADDED : டிச 08, 2025 06:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில், பல வளர்ச்சி திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செய்து கொடுத்துள்ளார். தி.மு.க.,வின் வளர்ச்சியை காண பொறுக்க முடியாத பா.ஜ., அரசும், அதன் அடிமையான
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும், எப்படியாவது தி.மு.க., அரசுக்கு ஏதாவது தொந்தரவு தர வேண்டும் என எண்ணி, பல வகைகளிலும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். எஸ்.ஐ.ஆர்., பணியை நாம் எதிர்த்தால், பழனிசாமி அதை ஆதரிக்கிறார்.
அ.தி.மு.க., தலைமை அலுவலகம், சென்னையில் இல்லை; டில்லியில் அமித் ஷாவின் வீட்டில் தான் உள்ளது. தற்போது, அ.தி.மு.க.,வில் அண்ணாதுரையும் இல்லை; திராவிடமும் இல்லை. சொல்லப் போனால் தற்போது அந்த கட்சியில் யாருமே இல்லை. வரும் 14ம் தேதி திருவண்ணாமலையில் மிகப்பெரிய மாநாடு நடக்க உள்ளது. இதற்கு, தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் திரள வேண்டும். சரியாக பணிபுரிந்தால், வரும் தேர்தலில், 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்வோம்.
- உதயநிதி துணை முதல்வர், தி.மு.க.,

