sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மத்திய அரசு செய்ய வேண்டியவற்றை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்த திமுக.,வின் தாராளம்

/

மத்திய அரசு செய்ய வேண்டியவற்றை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்த திமுக.,வின் தாராளம்

மத்திய அரசு செய்ய வேண்டியவற்றை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்த திமுக.,வின் தாராளம்

மத்திய அரசு செய்ய வேண்டியவற்றை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்த திமுக.,வின் தாராளம்

192


UPDATED : ஏப் 09, 2024 11:05 AM

ADDED : மார் 20, 2024 10:39 AM

Google News

UPDATED : ஏப் 09, 2024 11:05 AM ADDED : மார் 20, 2024 10:39 AM

192


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கவர்னர் அதிகாரம் குறைப்பு, ஜிஎஸ்டி சட்டங்கள் திருத்தம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, ரயில்வேக்கு தனி பட்ஜெட் என மத்திய அரசு துறைகள் செய்ய வேண்டிய பல விஷயங்களை தங்கள் கூட்டணி மத்தியில் ஆட்சியில் அமைத்தால் செய்வோம் என்று தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னையில் தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் வெளியிட்டார்.

அதில், முக்கிய அம்சங்கள்


* மாநிலங்கள் சுயாட்சி பெறும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்

* மாநில முதல்வர் ஆலோசனையின் படி கவர்னர் நியமனம்.

* கவர்னர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் 361வது பிரிவு நீக்கப்படும்

* சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்படும்

* புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து

* மத்திய அரசு பணிகளுக்கு தமிழ் மொழியில் தேர்வு, நுழைவுத்தேர்வு நடத்தப்படும்

* அனைத்து மாநில மொழி வளர்ச்சிக்கும் சம அளவு நிதி

* மத்திய அரசு அலுவலங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்

* திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்

* தமிழகம் திரும்பிய இலங்கை தமிழர்களுக்கு இந்தியக்குடியுரிமை வழங்கப்படும்.

* ரயில்வேக்கு தனி பட்ஜெட்

* புதிய கல்விக்கொள்கை ரத்து செய்யப்படும்

* லோக்சபா, சட்டசபை 33 சதவீத இட ஒதுக்கீடு உடனடியாக அமல்

* நாடு முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்தப்படும்

* இந்தியா முழுவதும் உள்ள குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை

* தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு

* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வட்டியில்லா கடன்

* தொழிலாளர் விரோத சட்டங்கள் மறு ஆய்வு

* தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றம்

* குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்

* வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகைக்கு இல்லாத போது விதிக்கப்படும் அபராதம் ரத்து

* ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்

* ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம்

* தொகுதி மறுவரையில் தமிழகம் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை

* விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படும்

* நாடு முழுவதும் கல்விக்கடன் ரத்து.

* காஸ் சிலிண்டர் ரூ.500 , பெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.65 ஆக குறைக்கப்படும்.

* பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது.

* மஹாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலைவாய்ப்பு நாட்கள் 100ல் இருந்து 150 ஆகவும் அதிகரிக்கப்படும்.

* மத்திய அரசின் உயர்கல்வி அமைப்புகளான ஐஐடி, ஐஐம், ஐஐஎஸ்சி ஆகியவை தமிழகத்தில் புதிதாக அமைக்கப்படும்.

* ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்.

* மாணவர்களுக்கு வட்டியில்லாத கல்விக்கடனாக ரூ.4 லட்சம் வரை வழங்கப்படும்.

* இஸ்லாமியர் மற்றும் இதர சிறுபான்மையினர் மேம்பாடு குறித்து ஆராய்ந்த சச்சார் கமிட்டி பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்.

* சென்னையில் 3வது ரயில் முனையம் அமைக்கப்படும்.

* விமானக் கட்டணம் குறைக்கப்படும் ஆகியன குறிப்பிடப்பட்டு உள்ளன.

* ரயில்வே கட்டண சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்.

* பா.ஜ., கொண்டு வந்த சட்டங்கள் மறு பரிசீலனை செய்யப்படும்.

* முதல்வர்களைக் கொண்ட மாநில வளர்ச்சிக்குழு அமைக்கப்படும்

* மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படும்.

*சேது சமுத்திரத் திட்டம் முழுமையாக நறைவேறவும், தென் மாநிலம் பொருளாதார வளர்ச்சி பெறவும், இந்திய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்தியில் அமையும் புதிய ஆட்சியில் உறுதியான நடவடிக்கை

* உச்சநீதிமன்றம், சிஏஜி, சிபிஐ, ரிசர்வ் வங்கி, யுஜிசி, தேர்தல் ஆணையம், மத்திய கல்வி வாரியங்கள் அரசியல் லையீடு இன்றியும், தன்னிச்சையாகவும் செயல்படுவது உறுதி செய்யப்படும்.

* இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்பு, வங்கிகளில் பெற்றுள்ள கடனும், வட்டியும் தள்ளுபடி செய்யப்படும்.

* நிதி ஆயோக் கலைக்கப்பட்டு, மத்திய திட்டக்குழு மீண்டும் அமைக்கப்படும்.

* பல்கலைகளில் கவர்னர்களால் நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் நியமனத்தை இனி மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநிலஅரசே மேற்கொள்ளும் வகையில் சட்ட திருத்தம்

* கல்லூரி மாணவர்களுக்கு ஒரு ஜிபி அளவில் இலவச சிம் கார்டு

*மாநிலங்களில் உள்ள மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் அந்தந்த மாநிலத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு

*இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கைகள்

* பணி ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் மத்திய அரசில் பணியாற்றிய செயலாளர்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளில் இணைய இரண்டு ஆண்டுகள் காத்திருப்புக் காலமாக அறிவித்து புதிய சட்ட திருத்தம்

* கச்சத்தீவை மீட்க வழிவகை செய்யப்படும்.

* கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சமூக நீதி அடிப்படையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யப்படும்

கேள்வி


பெரும்பாலான வாக்குறுதிகள் மத்திய அரசின் அதிகார வரம்பில் வருபவை. அவற்றை மாநில கட்சியாக இருந்து கொண்டு கூட்டணியில் இடம்பிடித்தாலும் திமுக.,வால் செய்ய முடியுமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தவறை சுட்டிக்காட்டிய மகன்

திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வாசிக்கும்போது, பொது சிவில் சட்டம் செயல்படுத்தப்படும் என முதலில் அறிவித்தார். பொது சிவில் சட்டத்திற்கு எதிரான நிலையில் இருக்கும் திமுக, அதனை ஆதரிப்பதாக அறிவித்ததால் சில நொடிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட அவரது மகனும், அமைச்சருமான உதயநிதி எழுந்துவந்து தவறை சுட்டிக்காட்டினார். அதன்பின்னர், மன்னிக்கவும் எனக் கூறிவிட்டு பொது சிவில் சட்டம் செயல்படுத்தப்படாது எனத் தெரிவித்தார்.








      Dinamalar
      Follow us