ADDED : ஜன 09, 2026 02:02 AM

அ.தி.மு.க., கூட்டணியில் அன்பு மணி இணைந்ததால், தி.மு.க., கூட்டணியில் சேர ராமதாஸ் தரப்பு பேச்சு நடத்துகிறது. ஆனால், அ.தி.மு.க., கூட்டணியில் அன்புமணிக்கு, 17 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக கூறுவதால், அதில் பாதி அளவுக்காவது தொகுதி ஒதுக்குமாறு ராமதாஸ் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.
ராமதாசுக்கு எட்டு தொகுதிகளை ஒதுக்கினால், கூட்டணியில் இருக்கும் வி.சி., - ம.தி.மு.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்கும். காங்கிரசுக்கும், அதிக இடங்களை ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால், தி.மு.க., தலைமை, 'ராமதாசை தனித்து போட்டியிட வைப்பது அல்லது அ.தி.மு.க., அல்லாத கூட்டணிக்கு அனுப்பி வைப்பது' என திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகள் கூறுகையில், 'தி.மு.க., வுடன் கூட்டணி சேர ராமதாஸ் மகள் ஸ்ரீ காந்தி விரும்புகிறார். தொகுதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டால், விஜயின் த.வெ.க.,வுடன் செல்லவும் ராமதாஸ் தயங்க மாட்டார்' என்றனர்.

