ADDED : ஜூலை 10, 2024 10:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:
தொழில் அதிபர் அதானி முதல்வரை சந்தித்தால், அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தி.மு.க.,வின் 'பவர் சென்டர்' அவரது மருகன் சபரீசன் மற்றும் மகன் உதயநிதி ஆகியோரின் கையில் தான் உள்ளது.
அதானி மட்டுமில்ல, யார் வந்தாலும் மருமகனை சந்திக்காமல் எதுவும் நடக்காது என்பது, நேற்று முன்தினம் நடந்த சம்பவம் ஒரு சான்று. முக்கிய சந்திப்புக்கு, தலைமை செயலர், டி.ஜி.பி., என, யாரும் தேவையில்லை. இதைத்தான் சூப்பர் பவர் முதல்வராக சபரீசன் உள்ளார் என சொல்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

